Monday, April 25, 2005

Presence of (right) Mind !!! --- விடை கூறுங்கள்!

ஓரு முறை ஒரு மாணவன் ஒரு சிறந்த பல்கலைக்கழகத்தில் முக்கிய வகுப்பில் சேர விண்ணப்பித்ததன் தொடர்ச்சியாக, எழுத்துத் தேர்விலும், கூட்டு ஆலோசனையிலும் வெற்றி பெற்று இறுதியாக நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டான். நேர்முகத் தேர்வின்போது கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடைகளை மாணவன் கூறிய வண்ணம் இருந்ததால், தேர்வாளர் பொறுமையிழந்து அவனை எப்படியாவது மடக்க தீர்மானித்து, "இப்போது, நான் உன்னிடம் சுலபமான 10 கேள்விகள் (அல்லது) மிகக் கடினமான ஒரு கேள்வி கேட்க விழைந்தால், நீ எதை விரும்புவாய்? நன்றாக யோசித்து உன் முடிவைக் கூறு!" என்றார்.

சிறிது சுய ஆலோசனைக்குப் பின் அம்மாணவன், "நான் ஒரு கடினமான கேள்வியையே தேர்ந்தெடுக்க விரும்புகிறேன்!" என்றான். அந்த தேர்வாளர். "உன் விருப்பம் அதுவானால் இதற்கு விடை சொல்! எது முதலில் வருகிறது? பகலா அல்லது இரவா?" என்று வினவினார். சற்றே அதிர்ந்து போன அந்த கெட்டிக்கார மாணவன், "பகல் தான் முதலில் வருகிறது, ஐயா" என்றான். "ஒரு வழியாக பையன் சிக்கிக் கொண்டான்' என்று மனதுள் குதூகலித்த தேர்வாளர், "எப்படிக் கூறுகிறாய்?" என்று புன்னகைத்தார்.

தேர்வாளர் கேட்டதற்கு மிகச் சரியான விடையுரைத்த அந்த புத்திசாலி மாணவனை தேர்வாளர் பல்கலைக்கழக வகுப்பில் சேர அனுமதித்தார் !!!

மாணவன் கூறிய விடை உங்களில் யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் சொல்லுங்களேன்!!!! விடையை முன்பே அறிந்தவர்கள் தங்கள் திருவாயை மூடிக் கொண்டு பேயா(சா)மல் இருக்கும்படி வேண்டிக் கொள்ளும் :<)

என்றென்றும் அன்புடன்
பாலா

3 மறுமொழிகள்:

சீமாச்சு.. said...

பரவாயில்லையே. நான் கூட அகராதியில் day என்ற வார்த்தை night என்ற வார்த்தைக்கு முன்னால் வரும் என்று சொல்வார் என்று யோசித்தேன்.
வித்தியாசமான விடைதான்!!

said...

அவர் கேட்ட கேள்வியிலே,
பகல் என்ற வார்த்தைதான் இரவுக்கு முன் வருகிறது.. அதனால, அதை வைத்து, அவன் பகல்தான் என்று கூறியிருக்கலாம்..

said...

mathan, seemachu and jeeva,
Thanks for your comments.

mathan,
That was brilliant :-)

The attempts by Seemachu and jeeva were also good enough, though not exact.

enRenRum anbudan
BALA

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails